×

சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை, மார்ச் 21: சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் செலவின பணிகளை பார்வையிட மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவினப் பணிகளை பார்வையிட மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வடசென்னை சட்டமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரத்திற்கு செலவின பார்வையாளராக அபிஜித் அதிகாரி, தொடர்பு அலுவலராக சண்முகம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளராக ஹரஹானந்த், தொடர்பு அலுவலராக முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னையின் வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணா நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக சுபோத் சிங், தொடர்பு அலுவலராக இளங்கோ மற்றும் துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னையின் விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக முகேஷ் குமாரி, தொடர்பு அலுவலராக ஹரிநாத் மற்றும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மானசி திரிவேதி, தொடர்பு அலுவலராக மோகன வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் செலவின பார்வையாளர் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் மொபைல் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

The post சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Chennai, ,Chennai district ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...